“இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே” (திருமூலர் வரலாறு)

“இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே” (திருமூலர் வரலாறு)

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே ( திருமந்திரம் 80)

நம் கண்களாலும், அறிவியல்-தொலைநோக்கியினாலும் பார்க்கக்கூடிய ஒரு சூரியக்குடும்பம், அதன் வளிமண்டலம், பால்வீதி, அண்டம், பெருவெளி, சந்திரன், சூரியன், சக்திகளம், சிவகளம், சூனியம் இப்படி தினமும் விரிவடையும் இப்பிரபஞ்சத்தில், பகல்-இரவு அற்ற இடத்தில், அந்த ஆதியோகியின் இணையடியின் கீழே (கருந்துளைக்குள்ளே) எண்ணிலி கோடி வருடம் இருந்தேன் என்று திருமூலரே அறிவிக்கின்றார்.


இறை அருளினால் ஒளியுடம்பு பெற்ற திருமூலர் அவ்வுடம்பில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். மேலும் இரவு பகல் அற்ற இடத்தில் அதாவது சந்திர சூரியர்கள் இல்லாத வேற்று உலகத்தில் வாழ்ந்ததாகவும், வானவர் போற்றும் நந்தியெம் பெருமானின் திருவடியின் கீழே நான் இருந்தேனே என்று தனது வரலாற்றினை திருமூலர் குறிப்பிடுகிறார். இப்படி வாழ்ந்த அந்த யோகி இறைவனின் ஆணைக்கேற்ப இமயமலை சாரலில் இருந்த பின்னர் தென்னாடு நோக்கி பயணித்த வேளையில், தமிழ் மொழியை கற்று இறைவன் ஆணையின்படி “சதாசிவ ஆகமத்தை” படைக்கின்றார். அதில் 3000 திருமந்திர பாடல்கள் இடம்பெறுகிறது.

Phone:1.800.123.4567
Fax: 1.800.123.4566
2nd Floor Sun Plaza,
39 G.N. Chetty Road, Chennai – 600006, Tamil Nadu, India